கல்வி மற்றும் சமூக நலன்புரி Education & Social Welfare

பார்வையற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக நாம் முன்னெடுக்கும் மனிதாபிமானப் பணிகள்.

Children receiving school supplies

கல்வி ஆதரவு Education Support

இலவச மூக்குக்கண்ணாடி வழங்கல்

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் பார்வைக்குறைபாடு உடையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாகப் பொருத்தமான மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வருகின்றோம்.

குடும்பக் கல்வி ஆதரவு

பார்வையற்ற பெற்றோரின் பிள்ளைகள் மற்றும் பார்வையற்ற மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளிற்குத் தேவையான கற்றல் உபகரணங்கள், சீருடைகள் மற்றும் மாதாந்தப் பகுதி நேர வகுப்புகளிற்கான நிதியுதவிகளை நாம் வழங்குகின்றோம்.

சமூக நலன்புரி Social Impact

உலர் உணவுப் பொதி வழங்கல்

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பார்வையற்ற குடும்பங்களுக்கு மாதாந்தம் தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றோம்.

சமூகமயப்படுத்துதல்

வீடுகளில் தனிமையில் முடங்கிக் கிடக்கும் பார்வையற்றவர்களைக் கண்டறிந்து அவர்களை வெளி உலகிற்கு அழைத்து வந்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் சமூகத்துடன் இணைந்து வாழவும் வழிகாட்டுகின்றோம்.

500+

மாணவர்களுக்கான கண்ணாடி வழங்கல்

200+

குடும்பங்களுக்கான மாதாந்த ஆதரவு

50+

மேற்கொள்ளப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள்