உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் Manufacturing & Marketing

பார்வையற்ற மக்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் எமது சுயமாகத் தயாரிக்கப்படும் பொருட்கள்.

Detergent manufacturing workshop
Our Primary Brand

"தாயகம்" - சுத்தமான உற்பத்தி Thayagam - Pure Production

"தாயகம்" என்பது எமது நிலையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக முன்னெடுப்பாராகும். இங்கு பார்வையற்றவர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்கும் வகையில் உயர்தர கைச்சவர்க்காரம், சலவைத் திரவங்கள், மற்றும் தரை சுத்திகரிப்பு திரவங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு உற்பத்தியும் மிகுந்த கவனத்துடனும் தரமான மூலப்பொருட்களுடனும் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுமையாக எமது பார்வையற்ற ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களின் நலன்புரிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

Wholesale Unit

"பஞ்சவர்ணம்" சந்தைப்படுத்தல் Panchavarnam Marketing

எமது உற்பத்திப் பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விநியோகிக்கும் பிரதான சந்தைப்படுத்தல் மையம் "பஞ்சவர்ணம்" ஆகும். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்த மையம் ஊடாக நாம் எமது பொருட்களைப் பல்வேறு வர்த்தக நிலையங்களுக்கும் நுகர்வோருக்கும் கொண்டு சேர்க்கின்றோம்.

சந்தைப்படுத்தல் மையம்:

"பஞ்சவர்ணம்", தீவக வீதி, யாழ்ப்பாணம்.

Contact for Bulk Orders: 021 312 3000

தயகம் தரமானது.. எமது மக்களின் வாழ்வாதாரம்!

By choosing Thayagam products, you are directly supporting the employment of visually impaired individuals.

Become a Retail Partner